நகரும் இலக்கை தாக்கக்கூடிய மூன்றாம் தலைமுறை உயர்தர மிக்க பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக மேற்கொண்டது.
2026 ஜனவரி 11 அன்று மகாராஷ்டிராவின் அகில்யா நகரில் உள்ள கே.கே. ரேஞ்சஸில், ஐதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ வின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் இச்சோதனையை நடத்தியது.
ஐதராபாத்தில் உள்ள இம்ரத் ஆராய்ச்சி மையம், ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகம், பாரத் டைனமிக் நிறுவனம் மற்றும் பாரத் எலக்டரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டது.


0 Comments