Recent Post

6/recent/ticker-posts

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் / Free trade agreement between India and the European Union

 இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் / Free trade agreement between India and the European Union
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பையும் இணைக்கும் வகையில் சுமார் 2 பில்லியன் மக்களை கொண்ட மிகப்பெரிய சந்தை உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை அறிவித்தனர். இதன் மூலம் BMW, Mercedes-Benz போன்ற ஆடம்பர கார்களின் இறக்குமதி வரி படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 110 சதவீதம் வரை உள்ள வரி, எதிர்காலத்தில் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் ஆடம்பர கார்கள் மலிவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஐரோப்பிய ஒயின், சாக்லேட் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படும். ஜவுளி, நகை, மருந்து போன்ற இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் பெரிய வாய்ப்புகள் உருவாகும். 

18 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கு புதிய வேகத்தை தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel