Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதமாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு / India's GDP growth rate will be 7.3 percent - IMF forecast

இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதமாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு / India's GDP growth rate will be 7.3 percent - IMF forecast

சர்வதேச நாணய நிதியத்தின், 2026ம் ஆண்டின் ஜனவரி உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கை கூறுவதாவது "இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி நினைத்ததை விட, மூன்றாவது காலாண்டில் அதிகமாக இருந்தது. 

நான்காவது காலாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி இன்னும் வலுவாக இருந்து வருகிறது.
ஆனாலும், வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் தற்காலிக காரணிகள் மட்டுப்பட்டால், இந்த வளர்ச்சி 6.4 சதவிகிதமாக 2026-27 ஆண்டில் குறையலாம்

உலக அளவிலான வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், அது நிலையாக தொடரும். 2026-ம் ஆண்டு 3.3 சதவிகித வளர்ச்சியையும், 2027-ம் ஆண்டு 3.2 சதவிகித வளர்ச்சியும் இருக்கும்.

உலக அளவிலான வளர்ச்சியை தற்போது வர்த்தக கொள்கைகளில் நடக்கும் மாற்றங்கள் குறைக்கின்றன. ஆனாலும், தென் அமெரிக்கா மற்றும் ஆசியா தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐயில் முதலீடு செய்வதால், வளர்ச்சி வேகத்தின் குறைவு சமன் செய்யப்படுகிறது".

சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பும், மத்திய அரசின் கணிப்பும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. 2025 - 26 நிதியாண்டின் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று மத்திய அரசு கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel