தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், "கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென 2025 - 26 ஆம் ஆண்டில் 36 கோடி ஒதுக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் கருப்பைவாய்ப் புற்றுநோயை தடுத்திடும் வகையில் இத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுடைய 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வரும் நாட்களில் 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


0 Comments