முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (5.1.2026) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலத்தில் பெண்களின் நலன், பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு (OECD), பொதுத்துறை கண்டுபிடிப்புகளின் கண்காணிப்பகம் (OPSI), ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF - OoI) ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழுவுக்கும் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் தமிழ்நாடு மாநிலக் குறிக்காட்டி வரையறை-2.0வை வெளியிட்டு, மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு ஆய்வறிக்கைகளையும் பெற்றுக் கொண்டார்.


0 Comments