Recent Post

6/recent/ticker-posts

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் / Pre-Budget Consultation Meeting with States and Union Territories chaired by Union Minister Smt. Nirmala Sitharaman

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் / Pre-Budget Consultation Meeting with States and Union Territories chaired by Union Minister Smt. Nirmala Sitharaman

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், புதுதில்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி; மணிப்பூர் ஆளுநர்; கோவா, ஹரியானா, மேகாலயா, சிக்கிம், தில்லி யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள்; அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள்; மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பரிசீலிக்க வேண்டிய, மத்திய நிதியமைச்சரிடம் பங்கேற்பாளர்கள் பல குறிப்பிடத்தக்க பரிந்துரைகளை முன் வைத்தனர்.

குறிப்பாக, மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டம் (SASCI) அதிக ஒதுக்கீடுகளுடன் தொடரப்பட வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர்.

2020-21 முதல், மத்திய அரசு, மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன்களாக ரூ.4.25 லட்சம் கோடிக்கு மேல் விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel