Recent Post

6/recent/ticker-posts

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் / Prime Minister chairs consultative meeting of Indian Artificial Intelligence (AI) startups

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார் / Prime Minister chairs consultative meeting of Indian Artificial Intelligence (AI) startups

புதுதில்லியில் இன்று காலை தமது இல்லத்தில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புத்தொழில் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இந்திய ஏஐ தாக்கம் குறித்த உச்சிமாநாடு 2026 அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ள 12 இந்திய ஏஐ புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகள் மற்றும் பணிகள் பற்றி எடுத்துரைத்தனர்.

அவதார், பாரத்ஜென், ஜென்லூப், சர்வம், ஷோத் ஏஐ, டெக் மகிந்திரா, ஜென்டெக் உள்ளிட்ட இந்திய ஏஐ புத்தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள்/ தலைவர்கள்/ பிரதிநிதிகள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel