மேற்கு வங்கத்தின் மால்டா டவுன் நிலையத்தில் இருந்து ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி இன்று ( ஜன.17) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், அவர் கவுஹாத்தி - ஹவுரா இடையேயான வந்தே பாரத் படுக்கை வசதி வந்தே பாரத் ரயிலையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன், பிரதமர் மோடி காணொலி மூலம் நான்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் தொடங்கி வைத்தார்.
நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட, முழுவதுமாக குளிரூட்டப்பட்ட இந்த வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், பயணிகளுக்கு சிக்கனமான கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற பயண அனுபவத்தை வழங்கும்.


0 Comments