ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புறப்பட்ட பிஎஸ்எல்வி சி62 (PSLV-C62) ராக்கெட் அன்விஷா (EOS-N1) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 சிறிய செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்த ராக்கெட், சரியாக 8-வது நிமிடத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தத் தோல்விக்கான முதற்கட்ட விசாரணையில், ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் (PS3 stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
505 கி.மீ தொலைவில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள்கள், உந்துவிசை குறைந்ததன் காரணமாகக் குறிப்பிட்ட உயரத்தை எட்ட முடியாமல் போயின.
இதனால் ராக்கெட்டில் இருந்த 18 செயற்கைக்கோள்களும் புவி ஈர்ப்பு விசை காரணமாக மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்து அழிந்தன.
கடந்த ஆண்டு ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி61 ராக்கெட்டும் இதேபோன்ற தொழில்நுட்பக் கோளாறால் தோல்வியடைந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் பிஎஸ்எல்வி ராக்கெட் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.


0 Comments