ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இரண்டாயிரத்து 756 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது.
இதில், இடஒதுக்கீட்டு பிரிவினரை விட பொதுப்பிரிவினருக்கு குறைந்த கட் அப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இடஒதுக்கீட்டு பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பொதுப்பிரிவினருக்கான பிரிவில் பணி ஒதுக்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டு பிரிவினரையும் பொதுப்பிரிவு பதவியில் நியமிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் மஷி ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுப்பிரிவு பதவி என்பது எந்த ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது கிடையாது என்று கருத்து தெரிவித்தனர்.
இதனால், தகுதிவாய்ந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர் ஆகியோரையும் பொதுப்பிரிவு பதவிகளுக்கு நியமிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


0 Comments