Recent Post

6/recent/ticker-posts

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கான பங்கு மூலதனத் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved increasing the share capital of the Small Industries Development Bank of India

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கான பங்கு மூலதனத் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved increasing the share capital of the Small Industries Development Bank of India

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த பங்கு மூலதனத் தொகை, நிதிச் சேவைகள் துறையால் மூன்று தவணைகளாக அந்த வங்கியின் கணக்கில் செலுத்தப்படும். 

இதில், 2025-26 - ம் நிதியாண்டில் 3,000 கோடி ரூபாயும், 31.03.2025 அன்று இருந்த 568.65/- கோடி ரூபாயாக இருந்த அதன் புத்தக மதிப்பிற்கு ஏற்ப செலுத்தப்படும்.

எஞ்சியுள்ள தொகை தலா 1,000 கோடி ரூபாய் வீதம் 2026-27 மற்றும் 2027-28 ஆகிய நிதியாண்டுகளில் இரண்டு தவணைகளாக, அதற்கு நிதியாண்டின் முந்தைய ஆண்டு மார்ச் 31 - ம் தேதி அன்று இருந்த புத்தக மதிப்பில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 5,000 கோடி ரூபாய் பங்கு மூலதனத் தொகை அந்த வங்கிக்கு செலுத்தப்பட்ட பிறகு, நிதி உதவி வழங்கப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை, 2025 - ம் நிதியாண்டின் இறுதியில் இருந்த 76.26 லட்சம் என்ற எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2028 - ம் நிதியாண்டின் இறுதிக்குள் 102 லட்சமாக (சுமார் 25.74 லட்சம் புதிய எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இணைக்கப்படும்) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி (30.09.2025 நிலவரப்படி), 6.90 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்களால் 30.16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன (அதாவது, ஒரு எம்எஸ்எம்இ நிறுவனத்திற்கு 4.37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு).

இந்த சராசரியைக் கருத்தில் கொண்டு, 2027-28 - ம் நிதியாண்டின் இறுதிக்குள் 25.74 லட்சம் புதிய எம்எஸ்எம்இ நிறுவனங்களை இணைப்பதன் மூலம், 1.12 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel