இந்தியா கடலோரக் காவல்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான (Pollution Control Vessel) 'சமுத்ர பிரதாப்' கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் (GSL) கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. 4,170 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாகும்.
மணிக்கு 22 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,000 மைல்கள் வரை பயணிக்க முடியும். தீயணைப்பு கருவிகள், ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.


0 Comments