Recent Post

6/recent/ticker-posts

இந்தியா - இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து / India-Israel Sign 17 Important Agreements

இந்தியா - இஸ்ரேல் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து / India-Israel Sign 17 Important Agreements

பிரதமர் நரேந்திர மோடி இருநாட்கள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரவு விருந்து அளித்தும் உபசரித்திருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்று, ஜெருசலேமில் உள்ள யூதர்களின் யாத் வஷேம் நினைவிடத்திற்கு சென்றார். 2ஆம் உலகப்போரின்போது ஜெர்மனியை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படைகளால் கொன்று குவிக்கப்பட்ட சுமார் 60 லட்சம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அந்த நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அந்நாட்டு அதிபர் இசாக் ஹோர்சோக்கையும் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு குறித்து விவாதித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், விண்வெளி, பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கடல்சார் பாரம்பரியம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel