Recent Post

6/recent/ticker-posts

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் 2026 - 3வது முறையாகத் தங்கம் வென்று இளவேனில் வாலறிவன் சாதனை / Elavenil Valarivan creates history by winning gold for the third time at the Asian Shooting Championships 2026

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் 2026 - 3வது முறையாகத் தங்கம் வென்று இளவேனில் வாலறிவன் சாதனை / Elavenil Valarivan creates history by winning gold for the third time at the Asian Shooting Championships 2026

டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையுடன் கடும் போட்டி நிலவியது. இளவேனில் 252.0 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 

ஜப்பானின் மிசாகி நோபாடா (251.5) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் மேகனா சஜ்ஜனர் (229.5) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

தனிநபர் பிரிவில் தங்கம் வென்றது மட்டுமின்றி, குழுப் பிரிவிலும் இளவேனில் சாதனை படைத்துள்ளார். இளவேனில் வாலறிவன், ஆர்யா போர்ஸ் மற்றும் மேகனா சஜ்ஜனர் அடங்கிய இந்திய அணி, மொத்தமாக 1892.6 புள்ளிகள் குவித்து குழுப் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய அளவில் ஒரு அபூர்வமான சாதனையை இளவேனில் நிகழ்த்தியுள்ளார். 2019 மற்றும் 2025-ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த இளவேனில், தற்போது 2026-லும் தங்கம் வென்று, இத்தொடரில் தனது 3-வது தனிநபர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel