Recent Post

6/recent/ticker-posts

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி / Agni-3 missile test successful

அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி / Agni-3 missile test successful

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து, இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஐ இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஒடிசாவின் சந்த்பூரில் அணுஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி-3 ஏவுகணை தோராயமாக 3,000 முதல் 3,500 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக அமைந்தது. ஏவுகணை இரண்டு நிலைகள் கொண்ட, திட எரிபொருள் மூலம் இயங்கும் அமைப்பாகும். 

முதல் நிலை எரிபொருள் முடித்தவுடன், இரண்டாவது நிலை எரிபொருள் பற்றி எரிந்து, ஏவுகணையை அதன் பாதையில் நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி மேலும் தள்ளுகிறது . மேலும் துல்லிய தாக்குதலை உறுதி செய்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel