Recent Post

6/recent/ticker-posts

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 5,980 கோடி முதலீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து / Two MoUs signed in the presence of Chief Minister M.K. Stalin with an investment of Rs. 5,980 crore

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 5,980 கோடி முதலீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து / Two MoUs signed in the presence of Chief Minister M.K. Stalin with an investment of Rs. 5,980 crore

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (பிப். 16) தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமான NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் 1,980 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 1,400 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும்; ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

ஜப்பான் நாட்டை சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார்கள், சென்சார்கள், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

NMB மினிபியா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மினிபியா மிட்சுமி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

ஏக்வஸ் (Aequs) குழுமம், 4,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7,000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம், SIPCOT-சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை உற்பத்தித் தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம் மற்றும் கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel