அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வந்து உற்சாகமாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றமான 'கினசெட்' (Knesset), பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது உயரிய கௌரவமான 'Speaker of the Knesset Medal'-ஐ வழங்கிச் சிறப்பித்துள்ளது. இந்த பதக்கத்தைப் பெறும் முதல் நபர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
அவரது உரையைத் தொடர்ந்து, அந்நாட்டுச் சபாநாயகர் பிரதமருக்கு உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதைப் பெற்றதன் மூலம், பரஸ்பரம் முரண்பட்ட உறவைக் கொண்டுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் உயரிய விருதுகளையும் பெற்ற உலகின் ஒரே தலைவர் என்ற சரித்திரப் புகழைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.


0 Comments