Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Modi inaugurates the country's first high-speed Namo Bharat train service

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Modi inaugurates the country's first high-speed Namo Bharat train service

இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம்.

அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel