Recent Post

6/recent/ticker-posts

கிஃப்ட் நகரத்திலிருந்து குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷாபூர் வரை தற்போதுள்ள வடக்கு – தெற்கு வழித்தடத்தின் நீட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves extension of existing North-South line of Gujarat Metro Rail Corporation from GIFT City to Shahpur

குஜராத் மாநிலம் கிஃப்ட் நகரத்திலிருந்து ஷாபூர் வரையிலான 3.3 கிமீ தொலைவுள்ள வழித்தட நீட்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 4 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 3 உயர்மட்ட நிலையங்களும் அமைக்கப்படும்.

இந்தத் திட்டத்திற்கு ரூ.1067.35 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தின் மூலம் 2029-ல் 23,702 பயணிகளும், 2041-ல் சுமார் 58,059 பயணிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடம் அகமதாபாத் மற்றும் கிஃப்ட் நகருக்கு இடையே உள்ள பிராந்தியத்தின் இணைப்பை வலுப்படுத்தும். உத்தேச வழித்தடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக மையங்கள் நேரடியாக பயனடையும்.

இந்த வழித்தடம் அமைக்கும் காலத்தில் சுமார் 1,000 பேருக்கும் கட்டுமானத்திற்குப் பின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக் காலத்தில் சுமார் 250 பேருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel