Recent Post

6/recent/ticker-posts

ராஜ்யசபா தேர்தல் 2026 - தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு / Rajya Sabha Election 2026 - All 6 candidates elected unopposed in Tamil Nadu

ராஜ்யசபா தேர்தல் 2026 - தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு / Rajya Sabha Election 2026 - All 6 candidates elected unopposed in Tamil Nadu

மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தற்போது 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் இதற்கான அறிவிப்பைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி வெளியிட்டார்.

தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் களம் கண்டனர்.

அதிமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) மற்றும் திமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) என 6 பேர் போட்டியிட்டிருந்தனர்.

இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், பிரதான கட்சிகளைச் சேர்ந்த மேற்கண்ட 6 பேரின் மனுக்கள் மட்டுமே முறைப்படி இருந்தன. மற்ற 6 பேரின் மனுக்கள் தகுதியற்றவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இவர்கள் 6 பேரும் "போட்டியின்றித் தேர்வு" செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், தம்பிதுரை, சுதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் நேரில் வந்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel