இந்தியா – கனடா விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒத்துழைப்புக்கான வழிவகைகள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு ஒப்பந்தம், முக்கிய கனிமங்கள் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்த ஒப்பந்தம், கலாச்சார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
செயற்கை நுண்ணறிவு, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண்மை, புதிய கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் இடையே 24 ஒப்பந்தங்கள், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சூரிய கூட்டமைப்பு ஆகியவற்றில் கனடா இணைதல், இந்தியா – கனடா இடையே நாடாளுமன்ற நட்புணர்வுக் குழு அமைத்தல், இந்தியா – கனடா இடையே பாதுகாப்புத்துறை தொடர்பாக பேச்சுக்களை தொடங்குதல், கனடா பல்கலைக்கழகங்கள் மூலம் புதிய கனடா – இந்தியா கூட்டுத் திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உத்திசார் அமைப்பை தொடங்குதல், புதுதில்லியில் 2026 மார்ச் 17 முதல் 30 வரை நடைபெற உள்ள பாரத் பழங்குடியின திருவிழா – 2026-ல் கனடா பங்கேற்பு ஆகியவை குறித்து அறிவிக்கப்பட்டது.


0 Comments