மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. தெற்கு தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய நுழைவுவாயிலாக இருக்கிறது.
சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பல்வேறு நாடுகளை இணைக்கும்.
அதேபோல கிராமப்புற பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தை 2028 டிசம்பர் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.


0 Comments