பருத்திக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves Minimum Support Price for Cotton

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பருத்தி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலையை உறுதி செய்யவும் 1,718.56 கோடி நிதியை இந்தியப் பருத்திக் கழகத்திற்கு (Cotton Corporation of India) வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பருத்தி சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலமும், வலுவான கொள்முதல் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஜவுளித் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.