2030-31-ஆம் ஆண்டிற்குள் பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், உலகளாவிய ஜவுளிச் சந்தைகளில் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும் ஏதுவாக, ரூ. 5659.22 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள "பருத்தி உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு" (Mission for Cotton Productivity) மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves “Mission for Cotton Productivity” with Rs.5659.22 crore Outlay for Self-Sufficiency in Cotton and Competitiveness in Global Textile Markets by 2030-31

இந்தியாவின் பருத்தித் துறையில் நிலவும் முட்டுக்கட்டைகள், சரிந்துவரும் வளர்ச்சி விகிதம் மற்றும் தரச்சார்ந்த கவலைகளைக் களைவதற்காக, "பருத்தி உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு" (2026–27 முதல் 2030–31 வரை) ரூ. 5659.22 கோடி ஒதுக்கீடு செய்ய, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இத்திட்டமானது, இந்திய அரசின் "5F தொலைநோக்குத் திட்டத்துடன்" (பண்ணையிலிருந்து - நாராக - தொழிற்சாலையாக - ஆடையாக - வெளிநாட்டிற்கு எனும் 5F பார்வை) முழுமையாக ஒத்துப்போகிறது.