Recent Post

6/recent/ticker-posts

சோலார் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் / Tamil Nadu Tops Southern States in Solar Power Generation

சோலார் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் / Tamil Nadu Tops Southern States in Solar Power Generation

நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை சார்ந்திருக்காமல், இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தென்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.

அதன்படி, ஒன்றிய மின்சார ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. 

இதில் தமிழகம் மட்டும் தனிச்சிறப்பாக 218.60 கோடி யூனிட்களை உற்பத்தி செய்து முதலிடத்தை அலங்கரிக்கிறது. கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தின் உற்பத்தி 160 கோடி யூனிட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஓராண்டு காலத்திற்கு சுமார் 58 கோடி யூனிட்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. 

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா 181 கோடி யூனிட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா 113 கோடி யூனிட்களையும், தெலுங்கானா 71 கோடி யூனிட்களையும் உற்பத்தி செய்துள்ளது.

கேரளா 29 கோடி யூனிட்களுடன் அடுத்த இடத்தில் இருக்க, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 10 லட்சம் யூனிட்களை பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீட்டு பட்டியலில், தமிழகத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருப்பது நன்றாகவே தெரியவருகிறது. 

தமிழகத்தில் நிலவும் முக்கிய வானிலைதான் இந்த வெற்றிக்கு மிக காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால், சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தமிழகம் ஒரு சொர்க்கபுரியாக மாறியுள்ளது. 

சூரியசக்தி மின் நிலையங்கள் இதன் விளைவாக, பல்வேறு தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலப்பரப்புகளில் அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, சாமானிய மக்களும் இப்போது சூரியசக்தியின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினர். கரண்ட் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவது தற்போது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது என்று சொல்லலாம். 

கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. 

2024-25 நிதியாண்டில் 1,573 கோடி யூனிட்களாக இருந்த சூரியசக்தி மின் உற்பத்தி, 2025 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான மத்தியில் 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel