Recent Post

6/recent/ticker-posts

2026 மே மாதத்தில் ரூ. 1,94,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் / GST Collection Crosses ₹1,94,000 Crore in May 2026

2026 மே மாதத்தில் ரூ. 1,94,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் / GST Collection Crosses ₹1,94,000 Crore in May 2026

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த மே மாதத்தில் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.94 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

மே மாதத்தில் சிஜிஎஸ்டி ரூ.37,397 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.45,143 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.51,990 கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதி மூலம் கிடைத்த ஐஜிஎஸ்டி வருவாய் மட்டும் 19.1 சதவீதம் உயர்ந்து ரூ.59,654 கோடியாக உள்ளது.

திருப்பி வழங்கப்பட்ட தொகைகளை கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel