இந்தியாவின் நட்சத்திர வீரரான 24 வயது தீரஜ் பொம்மதேவரா ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை வில்வித்தையின் ஒற்றையர் பிரிவில் அவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான லீ வூ சீக்கை தீரஜ் எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அம்பு எய்வதில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய அவர் 7-3 என்ற கணக்கில் கொரிய வீரரை முழுமையாக வீழ்த்தினார்.
இந்த இமாலய வெற்றிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் இந்தியாவின் மற்றொரு இளம் வீராங்கனையான கும் கும் மொஹோடுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.


0 Comments