Recent Post

6/recent/ticker-posts

ஐபிஎல் 2026 - ஆர்சிபி சாம்பியன் / IPL 2026 – RCB Crowned Champions

ஐபிஎல் 2026 - ஆர்சிபி சாம்பியன் / IPL 2026 – RCB Crowned Champions

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடி​வில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 155 ரன்​கள் எடுத்​தது.

இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில், 11 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel