Recent Post

6/recent/ticker-posts

தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Bill to Amend the Prevention of Insults to National Honour Act, 1971 Passed

தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Bill to Amend the Prevention of Insults to National Honour Act, 1971 Passed

தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-ன் படி தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 24-ஆம் தேதி ''தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புக்கு இடையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் இன்று இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து இச்சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் மூலம் இனி வந்தே மாதரம் பாடல் பாடப்படும் போது இடையூறு செய்வது அல்லது அவமதிப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இந்த குற்றத்திற்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel