Recent Post

6/recent/ticker-posts

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Birth and Death (Amendment) Bill 2026 Passed in Lok Sabha

மக்களவையில் பிறப்பு, இறப்பு திருத்த மசோதா 2026 நிறைவேற்றம் / Birth and Death (Amendment) Bill 2026 Passed in Lok Sabha

மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் அறிமுகப்படுத்தப்பட்ட 'பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026', எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள 1969-ஆம் ஆண்டின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்புகளை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், தாமதமான பதிவுகளுக்கான நடைமுறைகளைக் கடுமையாக்கவும் வழிவகை செய்கிறது.

1 முதல் 2 ஆண்டுகள் தாமதம்: ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து 1 ஆண்டுக்கு மேலாகி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்தால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் (Executive Magistrate) ஒப்புதலுக்குப் பிறகே பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்: நிகழ்வு நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமானால், நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate) நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்கள் குடிமக்களின் முக்கியமான சட்டப்பூர்வ அடையாளமாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel