2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்றார் / Indian Para-powerlifter Jandu Kumar Wins Bronze Medal at the 2026 Commonwealth Games

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆண்கள் ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில், தனது முதல் முயற்சியில் 181 கிலோ எடையையும், இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையையும் வெற்றிகரமாகத் தூக்கினார். இதன்மூலம் 130.9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.