மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு அசத்தலாகச் செயல்பட்டு, காமன்வெல்த் போட்டிகளில் தனது 3வது தொடர்ச்சியான தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் 28 வயதான சானம்பம் ரிஷிகாந்த சிங் மொத்தம் 264 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவுக்கு முதல் வெள்ளியைப் பெற்றுத் தந்தார்.
ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துபாண்டி மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி (ஸ்னாட்ச் 126 கிலோ + கிளீன் & ஜெர்க் 160 கிலோ) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கத்துடன் 8வது இடத்தில் உள்ளது.


0 Comments