Recent Post

6/recent/ticker-posts

23வது காமன்வெல்த் போட்டி - 6வது நாள் / 23rd Commonwealth Games – Day 6

23வது காமன்வெல்த் போட்டி - 6வது நாள் / 23rd Commonwealth Games – Day 6

23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.

இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 6ம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங், வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

குல்வீர் சிங் பந்தய தூரத்தை 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் (27:49.78) கடந்து 2வது இடத்தைப் பிடித்தார்.

காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.

பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 69 கிலோ எடை பிரிவில் களம் இறங்கிய அவர், ஸ்நாட்ச் பிரிவில் 101 கிலோ , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 126 கிலோ என மொத்தம் 227 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார்.

6ம் நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் கனடா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து , நைஜிரியா முறையே 2 முதல் 5வது இடங்களிலும் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel