பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026ஐ நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கடந்த 27ஆம் தேதி அறிமுகத்தினார்.
இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
இன்றும் (29-07-26) விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த குரல் வாக்கெடுப்பில் மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து, 'பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026' நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


0 Comments