Recent Post

6/recent/ticker-posts

தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம் - நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding (MoU) between NIFTEM and Massey University, New Zealand

தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம் - நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் / Memorandum of Understanding (MoU) between NIFTEM and Massey University, New Zealand

மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழ் ஹரியானா மாநிலம் குண்ட்லியில் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு, மேலாண்மை நிறுவனம், நியூசிலாந்தின் மாஸ்ஸி பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2026 ஜூலை 2 அன்று, அமைச்சகத்தின் செயலாளர் திரு. ஏ. பி. தாஸ் ஜோஷி, இணைச் செயலாளர் திரு. தேவேஷ் தேவல், அதன் இயக்குநர் டாக்டர் ஹரிந்தர் சிங் ஓபராய் தலைமையிலான மூத்த குழுவினர் முன்னிலையில் கையெழுத்தானது.

உணவுத் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டங்கள், மூன்றாம் தரப்பு நிதியுதவிக்கான கூட்டு விண்ணப்பங்கள், கருத்தரங்குகள், கல்விசார் கூட்டங்களில் பங்கேற்பு, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களிடையே கருத்துக் பரிவர்த்தனைகள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்.

இரு நிறுவனங்களையும் சேர்ந்த பிரத்யேக ஒருங்கிணைப்பாளர்கள், இந்தக் கூட்டு முயற்சிகளைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லதக்கதாகும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம், அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எதிர்காலக் கல்விசார் ஓத்துழைப்புக்களை வளர்ப்பதற்கான சட்டரீதியிலான கட்டமைப்பாகவும் செயல்படுகிறது.

இந்தக் கூட்டு முயற்சியானது சர்வதேசக் கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், உணவுத் தொழில்நுட்பம், பதப்படுத்துதலில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், அத்துடன் இரு நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel