Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தில் எல் நினோ பாதிப்பு குறித்த தமிழக அரசு புதிய சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு அமைப்பு / Tamil Nadu Government Constitutes a Special Expert Advisory Committee on El Niño Impact

தமிழகத்தில் எல் நினோ பாதிப்பு குறித்த தமிழக அரசு புதிய சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு அமைப்பு / Tamil Nadu Government Constitutes a Special Expert Advisory Committee on El Niño Impact

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டில் வலுவான 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் பாதிப்புகளை அறிவியல் ரீதியாகக் கண்காணிக்கவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 'சிறப்பு வல்லுநர் ஆலோசனைக் குழு' ஒன்றை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்தகைய காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளவும், வறட்சி மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கண்டறிந்து அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் 'தமிழ்நாடு பேரிடர் ஆபத்து குறைப்பு முகமையின்' (TNDRRA) கீழ் சிறப்பு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் தலைவராகச் செயல்படும் இக்குழுவில், பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த காலநிலை மாற்ற வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  1. பேராசிரியர் எஸ். கண்மணி - இயக்குநர்/துறைத் தலைவர், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
  2. டாக்டர் பாலாஜி நரசிம்மன் - பேராசிரியர், ஐ.ஐ.டி மெட்ராஸ்.
  3. டாக்டர் அறிவுடை நம்பி அப்பாதுரை - இயக்குநர், டபிள்யூ.ஆர்.ஐ இந்தியா.
  4. பேராசிரியர் டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன் - ஆலோசகர், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்.
  5. டாக்டர் ஆர். வெங்கடேசன் - உறுப்பினர், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு.
  6. டாக்டர் ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் - இயக்குநர், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம்.
  7. பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) - மூத்த மேலாளர், டி.என்.யு.ஐ.எஃப்.எஸ்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel