மசோதாவானது 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971'-இன் வரம்பிற்குள் வந்தே மாதரம் பாடலையும் கொண்டுவருகிறது. இச்சட்டத்தின் படி அரசியலமைப்புச் சட்டம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் உள்ளிட்ட தேசியச் சின்னங்களை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த திருத்தம் நடைமுறையானால், 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது, அதற்கு இடையூறு விளைவிப்பது ஆகியவைகளுக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.
இந்த நிலையில் இன்று மக்களவையிலும் 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத் (திருத்த) மசோதா, 2026' நிறைவேறியுள்ளது.


0 Comments