புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான பட்டியலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அந்த பட்டியலை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிசீலித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.
அந்த பட்டியலை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான உத்தரவு ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
புதிய நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன், ரஜ்னிஷ் பதியில், நடராஜன் ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிகுமார், நாகராஜன் திலீப் குமார், எல்லப்பன் மனோகரன் ஆகிய 8 பேரும், மாவட்ட நீதிபதிகளான டாக்டர் பி.முருகன், மதி எம்.டி.சுமதி, சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், என்.குணசேகரன், எஸ்.அல்லி, திருமகள் சந்திரசேகர் ஆகிய 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதன்பிறகு நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9 ஆக குறைந்துள்ளது.


0 Comments