விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில், சுமார் ரூ.5,600 கோடிக்கும் அதிகமான செலவில் பொது-தனியார் கூட்டு முறையில் அமைக்கப்பட்ட 'அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை' பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆந்திராவின் பாரம்பரியக் கட்டடக்கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையம் முதற்கட்டத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
விசாகப்பட்டினத்தில் ரூ.460 கோடி செலவில் அமையவுள்ள ஆந்திராவின் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கர்நூல் மற்றும் அனந்தபூரில் அமைக்கப்பட்ட சோலார் மற்றும் காற்றாலை மின் வழித்தடத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


0 Comments