தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (ஆக. 13) சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், ரூ. 67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாள்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், வர்த்தகம், வணிகம், இருதரப்பு முதலீடுகள் மற்றும் சகோதர நகர ஒத்துழைப்பு, இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ரஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின், திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ரூ. 350 கோடி செலவிலான டிஷ்யூ காகிதம் வணிக உற்பத்திக்கான பயன்பாட்டைத் திறந்து வைத்தும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகலில், ரூ.250 கோடி செலவிலான ஏரோஹப் வளாகத்தைத் திறந்து வை சிப்காட் தொழிற்பூங்காவிற்கு 122.08 கோடி செலவிலான 11 புதிய கட்டடங்களும், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் சார்பாக 55.66 கோடி செலவிலான 2 புதிய கட்டடங்களும் என மொத்தம் ரூ. 777.74 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
மேலும், ரூ. 4,476 கோடி முதலீடு மற்றும் 5,074 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ. 2,676 கோடி முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.


0 Comments