மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா விரிவான பரிசீலனைக்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுவர்.
இக்கூட்டுக்குழு இம்மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்து, 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


0 Comments