சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் 'நெல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
ஊக்கத் தொகையை ஓராண்டில் 156க்கு மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல் முறை. சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்புக்கு டன் ரூ 709.50 தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்.
ஊக்கத்தொகை உயர்வால் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கரும்பு விலையாக கிடைக்கும்.
மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.3290.50 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் ஊக்கு தொகை ரூ.709.50 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊக்கத்தொகை ஒரே ஆண்டில் ரூ.360.50 அதிகரிக்கப்பட்டிருக்கிறது.


0 Comments