Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் நியமனம் / Justice T. Krishnakumar Appointed Chairperson of the Tamil Nadu Law Commission

தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் நியமனம் / Justice T. Krishnakumar Appointed Chairperson of the Tamil Nadu Law Commission

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து தற்போது சட்ட ஆணையம் மறுசீரமைக்கப்பட்டு தலைவர் மற்றும் முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார், நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் முழு நேர உறுப்பினர்களாக நீதிபதி ஆர்எம்டி டீக்கா ராமன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, டி.கே.ராமச்சந்திரன் ஐஏஎஸ், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழக அரசு, ஏ. அருணகிரி, சட்டத்துறை முன்னாள் செயலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினர்களாக பி. மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட நீதிபதி, ஆர். கோவிந்தராஜன், முன்னாள் மாவட்ட நீதிபதி, சட்டத்துறை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி - முழு நேர உறுப்பினர் செயலாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel