Recent Post

6/recent/ticker-posts

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / MSME Development Amendment Bill passed in Lok Sabha

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / MSME Development Amendment Bill passed in Lok Sabha

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவோர், அதற்கான பணத்தை செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் அல்லது சேவையைப் பெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதற்கான கட்டணங்களை 'வர்த்தக வரவுத் தொகை தள்ளுபடி அமைப்பு' (Trade Receivables Discounting System - TReDS) மூலமாகவே செலுத்த வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், 'இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி தோல்வி அடைந்தால், அந்த முயற்சி முடிவுக்கு வந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் நடுவர் மன்ற தீர்வுக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel