மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2026 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் மொரிஷியஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியா - மொரிஷியஸ் இடையே எண்ணெய், எரிவாயு துறைகளில், பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்திற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - மொரிஷியஸின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இடையே, நீண்ட கால விற்பனை, கொள்முதல் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாகனங்களுக்கான பெட்ரோல், அதிவேக டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றிற்கான அந்நாட்டின் முழுமையான இறக்குமதித் தேவையையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பூர்த்தி செய்யும்.
இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம், அந்நாட்டிற்கு நீண்ட கால எரிபொருள் விநியோக உத்தரவாதத்தை அளிக்க வகை செய்கிறது.
இது அந்நாட்டிற்கு எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதுடன், எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.


0 Comments