பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.23,731 கோடி நிதி ஒதுக்கீட்டில் தேசிய சுழற்சி உயிரி ஆற்றல் திட்டத்திற்கு (கோபர்தன்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தூய்மையான எரிசக்திப் பயணத்தில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். வேளாண்மைக் கழிவுகள், சாணம், நகர்ப்புறக் கழிவுகள் உள்ளிட்டவற்றைத் தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருவாயாக மாற்ற இத்திட்டம் வழிவகுக்கும்.
2026-27 நிதியாண்டு முதல் 2035-36 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், உயிரிஎரிவாயு உற்பத்தியை நாட்டின் எதிர்கால எரிசக்திக் கட்டமைப்பின் முக்கியத் தூணாக மாற்றும்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இத்திட்டம், உள்நாட்டு உற்பத்தியைப் பத்து மடங்கு வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.


0 Comments