Recent Post

6/recent/ticker-posts

பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் / Defence Acquisition Council Approves Procurement Proposals Worth Rs 1.10 Lakh Crore for Armed Forces

பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் / Defence Acquisition Council Approves Procurement Proposals Worth Rs 1.10 Lakh Crore for Armed Forces

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளுக்காக சுமார் ரூ.1,10,000 கோடி மதிப்பிலான பல்வேறு தளவாடங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான கொள்கை அளவிலான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மொத்தக் கொள்முதலில் சுமார் 98 சதவீத தளவாடங்கள் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இந்திய ராணுவத்திற்காக ரசாயன, உயிரியல், கதிர்வீச்சு, அணு ஆயுதப் பாதிப்புகளைக் கண்டறியும் உளவு வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் இயங்கும் அதிநவீன வாகனங்கள், கண்ணிவெடி பதிக்கும் அமைப்புகள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இழுவை பீரங்கிகள் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உளவு வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிக்கும் திறன் கொண்டவை. நவீன வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடினமான சூழ்நிலைகளில் ராணுவப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படும்.

இந்திய கடற்படைக்காக ஆருத்ரா ரேடார்கள், கடல்சார் எரிவாயு டர்பைன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா ரேடார்கள் தற்போதைய கண்காணிப்பு ரேடார்களுக்கு மாற்றாக செயல்படும். உள்நாட்டு எரிவாயு டர்பைன் உற்பத்தி, போர் கப்பல் துறையில் அயல்நாட்டு சார்புநிலையைக் கணிசமாகக் குறைக்கும்.

இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களின் போர் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தரைவழி பல்நோக்கு ஜாமர்கள், பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பான அணுகல் அட்டை (Access Card) அமைப்பைப் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமர்கள் எதிரிகளின் ரேடார்களை முடக்கும் வல்லமை கொண்டவை.

பாதுகாப்பான அணுகல் அட்டை அமைப்பு வழக்கமான காகித அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அதிநவீன ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் பலப்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel