பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில், அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே, 77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3, 4-வது ரயில் வழித்தடம் அமைத்தல், ஓசூர் – ஓமலூர் இடையே, 147 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல், சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே, 159 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல் ஆகிய மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்.
மேலும், வைட்பீல்ட் – பங்காரப்பேட்டை இடையே, 47 கி மீ தொலைவிற்கு 3, 4-வது ரயில் பாதை அமைத்தல், செகந்திராபாத் (காட்கேசர்) – காசிபேட் இடையே, 110 கி மீ தொலைவிலான பல-தட ரயில் பாதைகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
புதிய ரயில் வழித்தடங்கள், போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்த உதவிடும். இதன் மூலம், பயணிகளிடையே, ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறன், சேவையின் நம்பகத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.

0 Comments