20வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 4 வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 விளையாட்டு வீரர்களும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அகதிகள் அணியினரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய அணியில் 269 வீரர்கள் மற்றும் 234 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 36 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் களம் காண்கின்றனர். இந்தியா இன்று 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றது.
துப்பாக்கி சுடுதல் - ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில் ஹிமான்ஷு தில்லான் வெள்ளிப் பதக்கத்தையும், ருத்ராங்க்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதல் - ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஹிமான்ஷு தில்லான் மற்றும் பார்த்த் மானே ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
கலப்பு தற்காப்புக் கலை (Mixed Martial Arts) - பெண்களுக்கான பாரம்பரிய 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சிங்கப்பூரின் டியோ ஹுய் ஹூனிடம் தோல்வியடைந்த சுச்சிகா தரியல் வெண்கலப் பதக்கம் வென்றார்.


0 Comments