சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியில் சீனாவின் ஹீ ஜி டிங்-ரென் சியாங் யூ ஜோடியை 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன் மூலம் சீனா மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றி நடப்பு சீசனில் சாட்விக்-சிராக் ஜோடிக்கு கிடைத்த 2-வது பட்டமாகும். இதற்கு முன்பு சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 தொடரில் இருவரும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
மேலும், தாய்லாந்து ஓபன் சூப்பர் 500 தொடரில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தனர். இதனால் இந்த சீசனில் இந்திய ஜோடி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.


0 Comments